Saturday, December 25, 2021

அன்பு மலர்கள்

அன்பு என்பது ஒளித்து வைத்துக் கொண்டு உரையாடுவதற்கு அல்ல.அது விஸ்தாரப்படுத்தி வெளிக் கொண்டு வலம் வந்து உற்சாகமாகி மகிழ்ச்சியடைய வேண்டும்!! அன்புக்கு வயதில்லை; வரையளவும் இல்லை; எண்ணிக்கை பார்த்து சமம் செய்ய அளவுகோல் தேவையில்லை..அன்பே அகிலம் போற்றும் வகையில் கரைபுரண்டு ஓடும் காட்டாறு;அள்ள அள்ள குறையாத அமுத சுரபி!! கோபம் என்ற வலையில் அன்பு சிறைப்பட்டு கிடக்கிறது; சிறகடித்துப் பறக்க சிறகிருக்க, இறக்கிவைக்க ஏன் தயக்கம்? அன்பை வென்று பண்பால் நிமிர்ந்து, சினத்தை விரட்டி சீருடன் வாழும் வாழ்க்கைக்கு சிறப்பு மிக்க திகட்டாத ஊட்டச்சத்து அன்பே; அன்பே என்றும் எங்கும் எப்போதுமாய் வியாபித்து நிலைத்துஇருக்கும்.. அன்பின் ஆணிவேர் - பொறுமை; அது வளரும் நீருற்று- சகிப்புத்தன்மை; அது மொட்டு விட்டு மலர - விட்டு கொடுத்து அமைதி காத்தல், அது பூத்துக் குலுங்க - நிறைவும் திருப்தியும், அது வாடாமல் காக்க - பெருந்தன்மை மிக்க மன்னிக்கும் மனம் !! தவிர்க்க வேண்டியது புறம் பேசும் குணம்!! அதுவே வாழ்நாள்' வரம்!! அன்றும் இன்றும் என்றும் நிரந்தரம்!! பணியும் சிரம்!! உயரும் நேசக்கரம்!!* _/\_

No comments:

Post a Comment