Thursday, July 2, 2015

பணிவே பலம்

பணிவே பலம்

நற்பணிகள் செய்து புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
மூன்று ஏழைகள் அவரை அணுகி அவரிடம் இருந்து பொருளதவி  பெற விரும்பினர்.

முதல் நபர் அவரை அணுகி, "அய்யா ! எனக்கு ஐந்து ரூபாய் வேண்டும், தயவு செய்து கொடுங்கள் என்று கேட்டார் ".
அவனது குரலில் இருந்த அகம்பாவத்தை கண்டு கோடீஸ்வரர் திடுக்கிட்டார்.
"நான் உன்னிடம் கடன் பட்டிருப்பது போலல்லவா நீ என்னிடம் அதிகாரத்துடன் கேக்டிறாய்? உனக்கு எவ்வளவு துணிச்சல்! ஒரு பிச்சை காரனுக்கு எப்படி நான் ஐந்து ருபாய் தர முடியும்? இதோ இந்த இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு இங்கிருந்து சென்றுவிடு", என்று சொல்லி இரண்டு ருபாய் கொடுத்தார். அந்த நபர், அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகன்றான்.

இரண்டாவது நபர் அங்கு வந்தான். " அய்யா! நான் கடந்த பத்து நாட்களாக ஒரு வேளை உணவு கூடச்சாபிடவில்லை, தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டினான்". "இந்த பத்து ரூபாயை பெற்றுக்கொள், மூன்று நாட்கள் நீ திருப்தியாக உணவு உண்ணலாம்", என்று வேண்டி கோடீஸ்வரர் அவனுக்கு பத்து ருபாய் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.

அதன் பின் மூன்றாமவன் அவரிடம் வந்தான். " அய்யா, உங்களுது உயர்ந்த குணங்களை பற்றி நான் கேள்வி பட்டுரிக்கிரேன், எனவே நான் உங்களை தரிசிக்க வந்தேன். அறவழியில் வாழும் நீங்கள் ஏழைகளின் கண் கண்ட தெய்வம் ஆவீர்கள் என்றான்".அவனது பண்பான பேச்சை கேட்டு மனம் கவரப்பட்ட அந்த கோடீஸ்வரர்,"அய்யா  தயவு செய்து உட்காருங்கள், நீங்கள் மிகவும் களைத்து போயிருக்கிரீர்களே என்றார்". உண்ட பின்னர் கோடீஸ்வரர் அவனை நோக்கி, " இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்,  அப்படியே செய்கிறேன் என்றார்". தன் மீது அவர் காட்டிய அன்பை கண்டு நெகிழ்ந்து போன அவன், " அய்யா, பசிக்கு அறுசுவை உணவை அளித்தீர்கள், அது போதும் எனக்கு, வேறு எதுவும் தேவை இல்லை.
தாங்கள் ஏன் மீது காட்டிய அபரிதமான அன்பை நான் என்னென்பேன்! உங்களுக்கு கடவுள் அணைத்து நலன்களையும் அருள்வாராக" என்று கண்ணீர் மல்கக்கூறினான். அவனது பணிவான வார்த்தைகளால், கோடீஸ்வரருக்கு
அவன் மீதிருந்த அன்பு பன்மடங்கு கூடியது. தன்னுடனே இருந்து விடுமாறு அவனை அவர் கேட்டுக்கொண்டார். தமது பங்களாவுக்கு அருகிலயே ஒரு வீடும் கட்டி கொடுத்தார். அவரது வாழ் நாள் முழுவதும் அன்புடன் உபசரித்தார்.

கடவுள் கோடிஸ்வரனை போன்றவர். மூன்று நபர்களும் மூவகை பக்தர்களை குறிப்பிடுகின்றனர் .

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பதை அறியாதவர்கள் முதல்வகை பக்தர்கள்.
கடவுள்  கொடுத்தது போதும், தங்களுக்கு தேவையானதை அவர் அறிவார் என்பவர் இரண்டாம்வகை பக்தர்கள்.
இறைவா! எல்லாம் நீயே, உன் அருளால் நாங்கள் வாழ்கிறோம், நீ தருவது அனைத்தும் அருட்ப்ரசாதம் என்று சதா இறைவனை போற்றுபவர்கள் மூன்றாம் வகை பக்தர்கள்.
அவர்களே சீரிய பக்தர்கள். கடவுள் அனைவருக்கும் அருள் புரிகிறார் என்றாலும், மூன்றாம் வகை பக்தர்களுக்கு அனைத்தையும் தந்து அருள் பாலிக்கிறார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



No comments:

Post a Comment